பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்திய அரசு மேல்நிலைப்பள்ளி

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்திய அரசு மேல்நிலைப்பள்ளி
X

களியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில்.

பிளஸ் 2 தேர்வில் காளியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.

மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பாக 6516 மாணவர்களும், 7002 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 518 மாணவ மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் தேர்ச்சி 88.66 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி 94.74 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்களை காட்டிலும் மாணவியின் தேர்ச்சி விகிதம் 6.08சதவீதம் கூடுதலாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 106 மேல்நிலைப்பள்ளிகளில் இருபத்தி ஏழு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 அரசு பள்ளிகளில் அய்யம்பேட்டை களியாம்பூண்டி மற்றும் மவுலிவாக்கம் தைச் சேர்ந்த 3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.48 சதவீதம் பெற்றுள்ளது.

இதில் களியாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சுமார் 500 கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாத இந்த கிராமத்தில் பணிபுரிய வரும் ஆசிரியர்கள் குறைந்த மாத காலங்களில் பணியிட மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.

இந்நிலையில் குறைந்த ஆசிரியர்களைக் கொண்டு தலைமையிசிரியர் வேதகிரி, ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் பிளஸ்டூ வகுப்பினை தொடர்ந்து நடத்தி அவ்வப்போது திருப்புதல் தேர்வு நடத்தி வந்துள்ளனர்

இதன் காரணமாக இருபத்தி ஆறு மாணவர்கள் இருபத்தி மூன்று மாணவிகள் என மொத்தம் 49 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!