தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட இரு ரௌடிகள் குண்டர் சட்டத்தில் கைது..!

தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட இரு ரௌடிகள் குண்டர் சட்டத்தில் கைது..!
X

கோப்பு படம் 

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 ரௌடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தமிழகத்தின் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர் கட்சிகள் தொடர் புகார் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரௌடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு பல்வேறு தொடர் குற்ற வழக்கில் ஈடுபட்டு வரும் ரவுடிகளுக்கு நேரில் சென்று எச்சரித்தும் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ரவுடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டும் , சிறையில் உள்ள ரவுடிகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு காவல் துறையின் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் குற்ற செயல்கள் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்துள்ள நிலையில் மேலும் தொடர் கடும் நடவடிக்கை காரணமாக அனைத்து நிலைகளிலும் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டங்கள் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல்துறை எஸ்பி சண்முகம் பரிந்துரை செய்யப்பட்டது.

அவ்வகையில்,

1. சக்தி |S/O முருகன், தோப்புத் தெரு, ஏலக்காய் மங்கலம்

2. சுப்பிரமணி (எ) ஏழுமலை வ/ 24 S/O செல்வராஜ், மேட்டுப்பாளையம், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் வேலூர் சிறையில் இருக்கும் இருவருக்கும் உண்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future