காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தொடரும் கொள்ளை: எஸ்.பி ஆபீசில் மனு
காஞ்சிபுரம் பேருந்து நிலையம்
கோயில் மற்றும் பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சி நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் , வெளி மாவட்ட , மாநில பயணிகள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இங்கு மாநில மற்றும் மாவட்ட பேருந்துகள் நூற்றுக்கணக்கான அரசு , தனியார் பேருந்துகள் இயங்குகிறது.
திருமண நாட்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் இதை சாதகமாக்கி கொள்ளும் கயவர்கள், பயணிகளிடம் இருந்து நூதன முறையில் பணம் , கைப்பேசி ஆகியவற்றை திருடி வருகின்றனர். பறிகொடுத்த பயணிகளோ, திருடர்களை கண்காணிப்பதில்லை, கைது செய்யப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில், பேருந்து நிலையத்தில் நடைபெறும் குற்றச்செயல்களில் தடுக்கவும் , விரைவாக புறக்காவல் நிலையத்தை திறக்கும் பணிகளை எடுக்க வேண்டும், சிசிடிவி கண்காணிப்பு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu