நாளை முதல் பொதுமக்கள் மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் - ஆட்சியர்

பைல் படம்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கப்பட்டதால் நாளை முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வருகிற 28-02-2022 (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu