காத்து வாங்கும் ஏசி பஸ் : கொரோனா அச்சத்தால் பயணிகள் தவிர்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு , கட்டுபாடுகள் என பொதுமக்களுக்கு அறிவித்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட அலையில் இன்று முதல் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க போக்குவரத்து துறைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல பத்துக்கும் மேற்பட்ட வழி நில்லா குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க சாதாரண கட்டணத்துடன் ரூ 15 அதிகம் செலுத்தி பயணிக்கலாம்.
தற்போது கொரோனா அலையால் அச்சம் கொண்டுள்ள பொதுமக்கள் இதில் பயணம் செய்தால் பரவல் எளிதாகும் என எண்ணி பயணத்தை தவிர்க்கின்றனர். இதனால் போக்குவரத்து துறைக்கு பெருத்த நட்டம் ஏற்படும் என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே போக்குவரத்து துறை பெருத்த இழப்பில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் பயணிக்க தயங்கும் பேருந்துகளை இயக்குவதை தடை செய்யலாமே ??
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu