9 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி அசத்திய நண்பர்கள்
சித்திரா பௌர்ணமி விழாவை ஒட்டி காஞ்சி சித்ரகுப்தன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கிய அதிமுக நண்பர்கள்.
இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக அதிகாலை 4 மணிக்கு துவங்கி சிறப்பு அபிஷேகம் சிறப்பு மலர் அலங்காரத்தில் சித்திரகுப்தர் அருள் பாலித்தார்.
உற்சவரான ஸ்ரீ கர்ணகி சமேத ஸ்ரீ சித்திர குப்தர் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளி பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு வழிபட்டனர்.
தமிழகத்திலேயே சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் மட்டுமே ஆலயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.
இவ் விழாவினை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பொருளாளர் வி.வள்ளிநாயகம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து சுமார் 25 ஆயிரம் பேருக்கு வெண்பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கினர்.
சுமார் ஒரு மணி நேரமாக சாமி தரிசனம் மேற்கொள்ள இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் காத்திருந்து வெளியே வந்த பக்தர்கள் அன்னதானம் பெற்று மகிழ்ச்சியுடன் உண்டனர்.
இந்த இரு நண்பர்களும் இணைந்து கடந்த பல வருடங்களாக சித்ரா பௌர்ணமி விழாவில் அன்னதானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu