பிரபல பள்ளி பெயரில் மோசடி: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் புகார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்வில் அரசின் பல்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு 40 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 54 சிறப்பு முகாம்கள் பல்வேறு கிராமங்களில் ஐந்து ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் ஐயங்கார் குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்வில், முதல்வரின் தனிப்பிரிவு முகவரிக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் இருவருக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே செயல்படும் பிரபல தனியார் கிறிஸ்தவ பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக தனது கணவருடன் கல்லூரியில் படித்த சென்னையை சேர்ந்த அமலன் மற்றும் அவரது நண்பன் ஞானசகாய வில்சன் ஆகியோர் இணைந்து ரூபாய் 3 லட்சம் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை அளித்துள்ளனர்.
இந்த நியமனை ஆணையை எடுத்துக்கொண்டு ஏதும் அறியாத இருவரும் பள்ளிக்கு சென்றபோது அந்த ஆணை போலியானது எனத் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கழித்து மீண்டும் முயற்சித்த போது பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு பெற்ற நிலையில் சி எஸ் ஆர் மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
மேலும் மேற்படி சென்னையே சேர்ந்த அமலனை பிடித்து கொடுத்தும் அவரது உடல்நிலை கருதி அவரை காவல்துறை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
பிரபல பள்ளியின் பெயரை சொல்லி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இதுபோல் பலரிடம் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது , தங்கள் பள்ளி நிர்வாகம் எடுக்கும் முடிவு மட்டுமே தங்களுக்கு தெரிய வரும் எனவும், பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்தும் நிர்வாகமே மேற்கொண்டு வருவதால் இங்கு எந்த ஒரு மோசடிக்கும் இடம் இல்லை என தெரிவித்தார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் செய்துள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா ? படித்துவிட்டு பணத்தை இழந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு பணம் மீட்கப்பட்டு தரப்படுமோ ? மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இதுபோன்று பலரிடம் போலி பணி ஆணைகள் வழங்கி உள்ளதா என பல கேள்விகள் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் தெரிய வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu