காஞ்சிபுரத்துக்கு கூடுதலாக நான்கு ஆம்புலன்ஸ்: ஆட்சியர் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்துக்கு கூடுதலாக நான்கு ஆம்புலன்ஸ்: ஆட்சியர் துவக்கி வைத்தார்.
X

புதிதாக வழங்கப்பட்ட 108 அவசர ஊர்திகளை  மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து அனுப்பி வைத்கும் கலெக்டர் ஆர்த்தி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 அவசர ஊர்திகள் செயல்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 4 வாகனங்கள் இணைந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களின் அவசர மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை பல்வேறு பகுதிகளில் இருந்து இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 31 வாகனங்கள் தொடர் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார்

அவ்வகையில் பெறப்பட்ட நான்கு வாகனங்களை இன்று மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் மதுரமங்கலம், வல்லம் மற்றும் ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளுக்கு கொடியசைத்து மக்கள் சேவைக்காக அனுப்பி வைத்தார். இத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 அவசர ஊர்திகள் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 108 அவசர ஊர்தி வாகனம் காஞ்சிபுரம் மைய மேலாளர் செல்வமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story