காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுப்புறவியல் கண்காட்சி
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கண்காட்சியினை பார்வையிட்ட சிறப்பு அழைப்பாளர் மற்றும் தமிழ் துறை தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை கலை , அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவை பயின்று வருகின்றனர்.
அவ்வகையில் தமிழ் இலக்கியம் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் நாட்டுப்புறவியல் பாடத்திட்டத்தின் கீழ் செயல்வழி தேர்வுக்கான பணியாக நாட்டுப்புறவியல் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தினர்.
இந்த கண்காட்சியில் நாட்டுப்புற தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பாரம்பரிய உணவுகள், பழம் பெரும் விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள், சிற்பக்கலை , பாரம்பரிய வீட்டு விளையாட்டு உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு நினைவு படுத்தும் வகையில் இந்த கண்காட்சி காட்சிபடுத்தி அமைந்துள்ளது.
இதனை திருவண்ணாமலை சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் செந்தில்வேலன், கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உடன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டு அதன் சிறப்புகளை மாணவர்களிடையே கேட்டறிந்தனர்.
விழாவில் பேசிய முதல்வர் வெங்கடேசன், மாணவர்களிடையே நாட்டுப்புற கலைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் , பழங்கால பொருட்கள் மற்றும் இசை வாத்தியங்கள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை சார்பில் , நாட்டுப்புறக் கலைஞருக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியினை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் என அனைவரும் பார்வையிட்டனர். இக்கண்காட்சியினை தமிழ் துறை பேராசிரியர்கள் கணபதி மற்றும் தவமணி ஆகியோர் மாணவ மாணவிகளுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu