கடைகளில் விசைத்தறி பட்டுச் சேலைகளை ஆய்வு செய்த பறக்கும்படையினர்

கடைகளில் விசைத்தறி பட்டுச் சேலைகளை ஆய்வு செய்த பறக்கும்படையினர்
X

 கைத்தறி ஆணையரால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் பட்டு சேலை விற்பனை அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பாரம்பரிய பட்டு கைத்தறி நெசவு சேலைகளுக்கு பதிலாக விசைத்தறி சேலைகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை சட்ட விரோதமாக விசைத்தறிகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதை தடுக்க, கைத்தறி ஆணையரால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் பட்டு சேலை விற்பனை அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சேலைகளை ஆய்வு செய்ததில் இந்த தனியார் அங்காடிகளில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளின் சில்க் மார்க் முத்திரை அச்சடிக்கப்பட்ட லேபிள் ஒட்டி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது இந்த அங்காடிகளுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டுச்சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

சில்க் மார்க் முத்திரை என்பது இயற்கையான பட்டு உற்பத்தி செய்யப்படும் பட்டு ஜவுளிகளில் அவற்றின் உண்மை தன்மையினை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துவதாகும். இந்நிலையில் பாலிஸ்டர் நூல்கள் கலந்து உற்பத்தி செய்யப்படும் சேலைகளில் பிரத்யோக சில்க் மார்க் முத்திரை லேபிள்களை இணைத்து விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடிய செயலாகும்

கடந்த வாரம் இதே போல், காந்திசாலை, சேக்குப்பட்டை நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த தனியார் கடைகளில் இதே பறக்கும் படை குழு ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் பட்டு கூட்டுறவு சங்கங்களில் ஒரிஜினல் கைத்தறி பட்டு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் வைக்கப்படும் அதனை எவ்வாறு சோதனை மேற்கொள்வது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளது

காஞ்சிபுரத்திற்கு நேரில் வந்து ஒரிஜினல் பட்டுசேலை எடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு வியாபாரம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?