15லட்சம் , 76 கிராம் தங்கம், 56 பட்டுப்புடவை பறிமுதல் ...

15லட்சம் , 76 கிராம் தங்கம், 56 பட்டுப்புடவை பறிமுதல் ...
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் 76 கிராம் தங்க நகை 56 பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நாள்தோறும் சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் உத்தரமேரூர் அடுத்த மானாமதி கூட்டு சாலையில் இன்று காலை நடைபெற்ற வாகன சோதனையின் போது, 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 76 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் 5 லட்சம் மதிப்பிலான 56 பட்டுப் புடவைகள் மற்றும் ரூ4.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி இடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்