வாலாஜாபாத் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
வாலாஜாபாத் அருகே நடைபெற்ற அஜித் என்ற வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்
நேற்று வாலாஜாபாத் அருகே நடைபெற்ற வாலிபர அஜித் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்து நீதிமன்றத்தில் வாலாஜாபாத் காவல்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகன் அஜித் வயது 25. கூடா நட்பின் காரணமாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வாலிபர் அஜித்தை மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு காரில் கடத்திச் சென்று முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் கிராம் ரயில்வே பாதை அருகே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
பின்னர் எந்தவிதமான அச்சமும் இன்றி அஜித்தின் தலையை தாங்கி கிராமத்தில் உள்ள கோவில் அருகே வீசிவிட்டு சென்று உள்ளனர்.
காலை நேரத்தில் அப்படியே சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தின் தலையும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் தலைமையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் ஒரு காரில் இருந்தவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரில் இருந்த காஞ்சிபுரம் திம்மராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன்( 22), விக்னேஷ் ஆகிய இருவரை கைது செய்து காஞ்சிபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டர்.
இவர்கள் இருவரை தவிர பூசிவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன், ஆதித்யா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரையும் காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அஜித் தனது நண்பர்களிடையே பணம் கேட்டு தொந்தரவு செய்தல் மற்றும் அவர்களது வாகனங்களை எடுத்துச் சென்றால் திருப்பித் தருவதில் ஏற்படும் தகராறு என தொடர்ந்து செய்து வந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவர் தடுக்கி விழுந்ததால் கை மற்றும் கால் உடைந்து மாவு கட்டு போட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu