தனியார் மரம் அறுவை மில்லில் தீ : குழந்தை உள்ளிட்ட இருவர் காயம்..!

தனியார் மரம் அறுவை மில்லில்  தீ :  குழந்தை உள்ளிட்ட இருவர் காயம்..!
X

காஞ்சிபுரம் தனியார் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இடிந்து தீ விபத்தை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது.

காஞ்சிபுரம் தாயார் குளம் அருகில் செயல்படும் தனியார் மரம் அறுக்கும் மில்லில் சிறிய வகையான பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே அமைந்துள்ள தனியார் மர இழைப்பு பட்டறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் குழந்தை உள்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார்குளம் அருகே அமைந்துள்ள தனலஷ்மி சா மில் என்கிற மர இழைப்பு பட்டறை செயல் பட்டு வருகிறது.இந்த மர இழைப்பு பட்டறையில் வடமாநில தொழிலாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் மர இழைப்பு பட்டறையில் பணி செய்து கொண்டிருந்த போது அங்கு இருந்த பார்ணஸ் எனும் பாய்லர் திடிரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீட்டும், தீ பரவாமல் தடுக்க நீர் மற்றும் மணல் அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் வடமாநில தொழிலாளி ராஜ்பவன்(வயது 22), மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் குழந்தை அங்கித் (வயது 4) என்கிற இருவரும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் பெண் ஒருவரும் இதில் சிறு காயங்களுடன் இருந்து வருகிறார்.

இவர்கள் மூவரையும் உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் என மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் குழந்தை எழுபது சதவீத தீக்காயங்களுடன் அவரது தந்தை 50 சதவீத தீக்காயங்களிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

மர இழைப்பு பட்டறையில் வடமாநில தொழிலாளி மற்றும் குழந்தை தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!