காக்கும் கரங்கள் காவலர் குழு சார்பில் ‘ விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

Finance Assistance To Police Family விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த இளங்கோ கடந்த நவம்பர் மாதம் சாலை விபத்தில் பலியானார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் இளங்கோ சாலை விபத்தில் இயற்கை எய்திய நிலையில் , காவலர் உறவுகள் 2017 குழு சார்பாக அவரின் குடும்பத்திற்கு 20 லட்சத்துக்கு 74 ஆயிரத்து ஐம்பது ரூபாய் நிதி உதவியை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது .

தமிழக காவல்துறை பணி தற்போது தொடர் பணி சுமையுடன் காவலர் முதல் உயர் அலுவலர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

தொலைதூரத்தில் தங்களது குடும்பம் வசிக்கும் நிலையில் , கிடைக்கும் சிறிது நேர ஓய்வை கூட தனது குடும்பத்துடன் செலவழிக்கும் நோக்கில் செல்லும் நிலையில் காவல்துறையினர் உள்ளனர்.அவ்வகையில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர் இளங்கோ கடந்த 2017 காவல்துறை பணியில் இணைந்தார்.
ராணிப்பேட்டை அடுத்த புதூர் கிராமத்தில் வசித்த தனது குடும்பத்தை காண கடந்த சில மாதங்களுக்கு முன் காண பணி முடித்த நிலையில் இரவு செல்லுகையில் கடந்த நவம்பர் மாதம் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

குழந்தையின் பிறந்த தினம் சில வாரங்களில் கொண்டாட உள்ள நிலையில் அதற்கான பணிக்கு சென்றுள்ளதாக அதன் பின் தகவல் வெளியாகியது.

மேலும் அவரது தங்கை திருமணத்திற்கு உள்ள நிலையில், இவருடைய குடும்ப வருமானம் மட்டுமே அவர்களை நிலை நிறுத்தி வந்துள்ளது.

இது போன்ற நிலையில் இவருடன் பனி பயிற்சி மேற்கொண்ட காவலர்கள் அனைவரும் 2017 காக்கும் உறவுகள் என ஒரு குழுவை உருவாக்கினர். இதில் நான்கு காவல் மண்டலங்களை சேர்ந்த 32 மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி பயிற்சி பெற்ற காவலர்கள் இக்குழுவில் இணைந்துள்ளனர்.

இது போன்று சக காவலர்கள் உயிரிழக்கும் நிலையில் , அவரது குடும்பங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று உயிரிழந்த காவலர் இளங்கோ குடும்பத்திற்கு 6459 காவலர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து ரூபாய் 20 லட்சத்தி 74 ஆயிரத்து ஐம்பது ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவலர் காக்கும்உறவுகள் குழு 2017 நிர்வாகிகள் காவலர்கள் கமல்ராஜ், விக்னேஷ், ஒப்படைத்தனர்.
இப்பணத்தில் அவரது மனைவி, மகன், தாய் தந்தை மற்றும் தங்கை திருமணத்திற்கு என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்ணீருடன் அவரது குடும்பம் பெற்றுக் கொண்ட நிலையில் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆறுதல் அளித்து உதவிகள் தேவைப்படும் நிலையில் தங்கு தடையின்றி தன்னை சந்திக்கலாம் எனவும் அவருக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அனைத்தும் உரிய முறையில் கால தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

நிலைகுலைந்த குடும்பத்திற்கு இது போன்ற சக காவலர்கள் ஒருங்கிணைந்து தங்கள் மகன்களாக நாங்கள் இருக்கிறோம் என உறுதிப்படுத்தி இதனை செய்தது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.இதுவரை இக்குழு ரூபாய் 1.5 கோடி மதிப்பில் ஓன்பது காவலர் குடும்பங்களுக்கு நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Feb 2024 7:30 AM GMT

Related News