/* */

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமா எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் 8500 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன் பணிகளான உழவு நாற்றங்கால் பராமரித்தல் மற்றும் நாற்று நடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பருவத்திற்காக (மெ.டன் அளவில்)யூரியா 2314, டி.ஏ.பி.437, பொட்டாஷ் 738, காம்ப்ளக்ஸ் 2427 என மொத்தம் 5916 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது.

எனவே உரத்தட்டுப்பாடு நிலவ வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு உரமும், உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையில் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உரம் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகள் உரம் வாங்கும் போது ஆதார் எண்ணையும் பயன்படுத்துவதுடன் அதற்குரிய ரசீதும் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!