காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பேச்சால் அதிர்ச்சியில் விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பேச்சால் அதிர்ச்சியில் விவசாயிகள்
X

உத்திரமேரூர் வட்டம் வயலக்காவூர் கிராமத்தில் தொடர் மழை காரணமாக நெல் பயிர்கள் மூழ்கிய நிலையில் அதை வருத்தத்துடன்  காண்பிக்கும் விவசாயி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர் சேதம் தொடர்பாக ஆட்சியர் பேச்சால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் என பல பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டது.

ஆடி மாதம் துவங்கிய நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள நெற் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாகவே இரவு மற்றும் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது.

அவ்வகையில், காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 12-ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் 195 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 249 மில்லி மீட்டர், உத்திரமேரூரில் 226 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புத்தூரில் 170 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 24 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் பகுதியில் 197 மில்லி மீட்டர் என 15 நாட்களுக்குள் கன மழை பெய்துள்ளது.

இதனால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அவ்வப்போது திடீர் என மழை பெய்து விவசாயிகளை பெருத்த வருத்தத்தில் ஆக்கியது. மேலும் விவசாய நிலங்களில் எல்லாம் நீர் சூழ்ந்து கொண்டு வடிகால் இன்றி இருந்ததால் அனைத்து நெல்களும் அறுவடை செய்ய இயலாத நிலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆடி முதல் வாரத்தில் அறுவடை செய்த நெல் மணிகள் அனைத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு போய் விவசாயிகள் காத்திருந்த நிலையில் அங்கும் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் சேதம் அடைந்து நிறம் மாறியும் முளைப்பு திறனும் கொண்டு தற்போது காணப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்யும் தொடர் கன மழை காரணமாக விவசாய நிலங்கள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சேதமடைந்துள்ளதாகவும் , அதற்கு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இது ஒரு புறம் இருக்க இன்று காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் , வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி , காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலநிலை மாற்றம் தவறிய நிலையில் கன மழை பெய்து கொண்டிருப்பதாக இதனால் விவசாய நிலங்கள் அறுவடை செய்ய இயலாத நிலையில் உள்ளது உணர்ந்து வேளாண் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் 250 ஏக்கர் விலை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு கருத்து அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

விவசாய சங்கங்கள் 500 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது என கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் 250 ஏக்கர் மட்டுமே என கணக்கில் கொண்டதும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவும் , அதே நேரத்தில் மாவட்டத்தில் குறைந்த சேதம் என மாவட்ட ஆட்சியர் கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேளாண்துறை கூறிய ஆய்வை முறையாக மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சேதமடைந்த அறுவடை நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததால் ஆர்ப்பாட்டம்..!