காஞ்சிபுரத்தில் கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி

காஞ்சிபுரத்தில் கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி
X

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.

விழிப்புணர்வு மனித சங்கிலியில், கல்லூரி , பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் 100க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகள்,பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி அமைத்து கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை,சங்கர் கண் வங்கி,அரிமா சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்தும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சங்கரன், காஞ்சிபுரம் சங்கர் கண் வங்கி செயலாளர் சரோஜா சங்கரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுகண் தான விழிப்புணர்வு மனித சங்கிலியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள்,பள்ளி மாணவர்கள் Dr.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிலிருந்து அறிஞர் அண்ணா கலையரங்கம் வரையில் மனித சங்கிலியை அமைத்து, கைகளில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் கண்தானம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.பரணிதரன், மாநில துணைத் தலைவர் டாக்டர் பி.டி. சரவணன் , மாவட்ட துணை ஆளுநர் லயன் எஸ்.சுரேஷ் மற்றும் லயன் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture