பழங்குடியினருக்கு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு

பழங்குடியினருக்கு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவாந்தண்டலம் கிராம பழங்குடியினருக்கு மாதிரி வாக்குபதிவு மையம் அமைத்து வாக்குப்பதிவு விழிப்புணர்வு நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி,வாலாஜாபாத் தாலுக்கா, காவாந்தண்டலம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மூலம் நடத்தப்பட்டது .

இதில் கட்டாயம் வாக்களிப்போம் , ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் ‌என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாதிரி வாக்குபதிவு மையம் அமைத்து எவ்வாறு வாக்குபதிவு செய்ய வேண்டும் என கூறி அனைவரையும் மாதிரி வாக்கு பதிவு செய்ய வைத்து சந்தேகங்களை தீர்த்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில்‌ வருவாய்‌அலுவலர் , விஏஓ மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குழுவினர் இருந்தனர்.

Tags

Next Story
ai future project