தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு

தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
X

சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் சித்திரகுப்தர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியையொட்டி நடைபெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்

வாக்காளர் சிறப்பு முகாமில் அளித்த விண்ணப்பங்கள் கூட சரிவர பட்டியலில் இணைக்கப்படவில்லை எனவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 ஆயிரம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சித்ரா பௌர்ணமி விழா அனைத்து பகுதிகளிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் உலகிலேயே காஞ்சியில் மட்டுமே சித்திரகுப்தற்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இத்திருக்கோயிலில் நேற்று சித்ரா பௌர்ணமி விழா தொடங்கி நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு சித்தர் குப்தர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

பொதுமக்கள் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என பல வகைகளில் நீண்ட வரிசையில் நின்று சித்திரகுப்தரை திருவிளக்கு ஏற்றி சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

விழாவில் கலந்து கொண்டுள்ள பக்தர்களுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அன்னதானங்களை வழங்கி வருகின்றனர்.

இவ்விழாவினை ஒட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி செயல்பட காவல்துறை ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது மனைவியுடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு சிறப்பு ஏற்றியும், தனது ஜாதகத்தை வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் குளறுபடியாகவே இருந்தது.

தேர்தல் ஒட்டி நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களையும் தேர்தலில் சேர்க்காமல் குளறுபடியும் அதே போல் சட்டமன்ற தொகுதி வாரியாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த 2021 ல் இருந்த வாக்காளர் எண்ணிக்கை விட கூடுதலாக இருக்க வேண்டும் , ஆனால் தற்போது குறைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது எனவே தேர்தல் ஆணையம் இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!