உத்திரமேரூர் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
உத்திரமேரூரில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்
உத்திரமேரூரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
சித்திரை மாதம் தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது அக்னி வசந்த விழா. திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் இந்தத் திருவிழா நடைபெறும்.
ஊர் மக்களின் விருப்பத்தையும் பொருளாதாரத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். பகலில் ஊர்ப் பொது இடத்தில் பாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும். திரௌபதி அம்மன் திருவிழாவின் சிறப்பம்சம் .
கடைசி நாளில் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். காலை தொடங்கும்போது தான் கர்ணனின் உயிர் பிரியும். இனி மிஞ்சியிருப்பது துரியோதனன் மட்டுமே. அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளமாக விரியும்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த அக்னி வசந்த திருவிழா வைகாசி 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அர்ஜுனன் தவசு, அம்மன் பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அபிமன்யு சண்டை, கண்ணன் தூது உள்ளிட்ட பல்வேறு மகாபாரத இதிகாச சொற்பொழிவு தொடர்ந்து நடைப்பெற்றது.
கடந்த 24 நாட்களாக நடைப்பெற்று வந்த மகாபாரத இதிகாச நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், களிமண்ணால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய துரியோதனன் உருவத்தை பீமன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து இரவு தீ மிதி திருவிழா இந்த கோவிலில் நடைப்பெற உள்ளது.
இந்த துரியோதனன் படுகளம் திருவிழாவில் உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu