தொடர்மழை காரணமாக‌ கீழ்கதிர்பூர் வாக்குசாவடி வளாகத்தில் புகுந்த மழைநீர்

தொடர்மழை காரணமாக‌ கீழ்கதிர்பூர் வாக்குசாவடி வளாகத்தில் புகுந்த மழைநீர்
X

குளம் போல் நீர் தேங்கி உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி வளாகத்தில் மழை தேங்கியுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாதுகாப்பிற்கு காவலர்கள் என அனைவரும் மாலை 4 மணிக்குள் அனைவரும் வாக்குசாவடியில் இருந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 9 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் 3 அடிக்கு மேல் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

இந்த பள்ளி வளாகத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கிராம ஊராட்சி செயலர் விரைவாக செயல்பட்டு நீரை வெளியேற்ற மோட்டார் அமைத்து நீரை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பள்ளிகளில் ஊழியர்கள் தங்குவதற்கு சற்று சிரமப்பட்டு வருகின்றனர். குளிர்காற்று ,தொடர்மழை நாளை தொடர்ந்தால் வாக்குபதிவு சதவீத பதிவு குறைய வாய்ப்புள்ளது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!