மது போதையில் தகராறு: ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டு உயிரிழப்பு

மது போதையில் தகராறு:  ஒருவருக்கு ஒருவர் தாக்கி  கொண்டு உயிரிழப்பு
X

மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி உயிர் இழந்த பிரபாகர், பெருமாள்.

காஞ்சிபுரத்தில் மதுபோதையில் ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டு இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு உயிரை எலெக்ட்ரிசியன்கள் இருவர் உயிரிழந்தவர்களின் உடலை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் நாராயணம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர்,பட்டு சேலை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வரும் நிலையில் ஓய்வு நேரங்களில் எலக்ட்ரீசியன் ஆகவும் பணிபுரிந்து தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று பணிக்கு சென்ற நிலையில் இன்று காலை வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் காலை 9 மணி அளவில் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரும் நேற்று வேலைக்கு சென்ற நிலையில் காலை வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்களும் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மாலை இரண்டு மணி அளவில் காலை பிரபாகர் சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தருகே மற்றொரு சடலம் நீரில் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்து அங்கு சென்று நீரில் மிதந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் காணாமல் போன பெருமாள் என தெரிய வந்து அது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, பிரபாகருக்கும், பெருமாளுக்கும் தொழில் பணத்தில் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்ற இருவரும் மதுபானம் அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர். பொன்னேரி கரை மேம்பாலம் கீழே தகராறில் ஈடுபட்ட போது இருவரும் சரமாரியாக கடுமையாக தாக்கிக் கொண்டு உள்ளனர்.

இதில் பிரபாகர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தப் போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்து போய் உள்ளார், அடிதடியில் மயங்கி விழுந்த பெருமாள் ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்து போய் உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பிரபாகர் உடலை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் உடலைப் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்து உள்ளது தெரிய வந்தது.

இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!