காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் எஸ்.பி. சுதாகர்

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிபபாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் அதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை காஞ்சி மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதனை பல்வேறு வயது தரப்பினரும் தற்போது பயன்படுத்த தொடங்கியதால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சி மாவட்ட காவல்துறை பல்வேறு நல சங்கங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது.

அவ்வையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் மருந்தியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் துவக்கி வைத்தார் . இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு போதைப் பொருட்கள் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகள் குறித்த துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் விநியோகித்தனர். இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் இதனை அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை பயன்படுத்தாமல் தடுத்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் காஞ்சி மாவட்டம் போதை பொருட்கள் எல்லாம் மாவட்டமாக உருவெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் எஸ்.பி.சுதாகர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!