சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா..

சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா..
X

மருத்துவர் தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனையில் மு முன்னாள் நிலைய மருத்துவ அலுவலர் மனோகரன் கேக் வெட்டி மருத்துவர்களுடன் கொண்டாடிய போது

மருத்துவர் தினத்தினையொட்டி அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

உஜ்ஜீவன் சிறு வணிக வங்கியும், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து தேசிய மருத்துவர் தினத்தை மருத்துவமனையின் கூட்ட அரங்கில் கொண்டாடினார்கள்.

நிலைய மருத்துவ அலுவலர் ப.சிவகாமி தலைமை வகித்தார். மயக்கவியல் துறையின் தலைவர் ஞானகணேஷ், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் கர்ணன், உஜ்ஜீவன் சிறு வணிக வங்கியின் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறுவைச் சிகிச்சை மருத்துவர் பிரசன்னா அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களில் 49 பேருக்கு சிறந்த மருத்துவர் விருதினை முன்னாள் நிலைய மருத்துவமனை அலுவலரும், இந்திய மருத்துவக் கழக தலைவருமான எஸ்.மனோகரன் வழங்கினார்.

விருது பெற்ற மருத்துவர்களின் செயல்பாடு மற்றும் நோய் தீர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மற்றும் அவர்களின் விடா முயற்சி என பல்வேறு கட்டங்களில் அவர்களின் நிலைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பேசி வாழ்த்திய செயல் அனைவரின் வரவேற்பை பெற்றது. பின்னர் மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்கள்.

தென்னிந்தியாவிலே மிகப்பெரிய அரசு இலவச புற்றுநோய் மருத்துவமனை இது என்பதும், இதற்காக தமிழக மருத்துவம் மற்றும் சுகாதார நல்வாழ்வுத்துறை ரூபாய் 250 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கட்டிடம் 95 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும் நிலையில் அதிநவீன சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படும் எனவும், சுகாதார துறையில் மிகப்பெரிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
ai in future agriculture