திமுக, திராவிடர் கழகமாக மாறி வருகிறது: பாஜ பொது செயலாளர் விமர்சனம்

திமுக, திராவிடர் கழகமாக   மாறி வருகிறது: பாஜ பொது செயலாளர் விமர்சனம்
X

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்த பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் பாஜக நிர்வாகிகள்

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட கழகமாக மாறி வருவதாகவும், திருமாவளவனோடு எல் முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது எனவும், சீமான் தினம் தினம் மாற்றி பேசும் குணம் உடையவர் என பாஜக பொது செயலாளர் அஸ்வத்தாமன் காஞ்சிபுரத்தில் பேட்டியளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் , அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்வதாக தெரிவித்தார்.

மேலும் திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல். முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது எனவும், அவர் சட்டம் பயின்றவர், ஆனால் திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேலும் அவர் முதலமைச்சர் ஆவதற்கு சீமான் ஆதரவு தெரிவிப்பதும் , இன்று ஆதரவு தெரிவித்து இன்னும் சில நாட்களில் அவருக்கு எதிர்ப்பும் தெரிவிப்பார் ஆகையால் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது