காஞ்சிபுரம் மாநகராட்சியில் 42 இடங்களில் திமுக நேரடி போட்டி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 42 இடங்களில் திமுக நேரடி போட்டி
X
பைல் படம்.
காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள 42 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலைத் திமுக தலைமைக் கழகம் இன்று மாலை வெளியிட்டது.

அப்புறம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகளும், மற்றொரு வார்டில் முஸ்லிம் லீக் கட்சியும் மற்றும் ஒரு வார்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் தலா ஒரு வார்டு வழங்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

திமுக சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை இருபத்தி நான்கு பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!