வாலாஜாபாத்தில் தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

வாலாஜாபாத்தில் தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
X

வாலாஜாபாத்திற்கு ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் பேரூர் கழக வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் உரையாற்றிய எம் எல் ஏ சுந்தர்.

வாலாஜாபாத் தெற்கு ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் பேரூர் தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டங்கள் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


இது மட்டும் அல்லாது ஆங்காங்கே தெருமுனை கூட்டங்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பொதுமக்களை சந்திக்கும்போது தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் ஒன்றியங்கள் தோறும் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் பேரூர் கழக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


இதில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் கூறிய அறிவுரைகளை ஏற்று விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகளை துவக்க வேண்டும் எனவும் வாக்கு சாவடி சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் முறையாக செய்ய வேண்டும் எனவும், 18 வயது நிரம்பிய இளைஞர்கள் மற்றும் பெண்களை வாக்கு சாவடி சிறப்பு முகாம்களில் அவர்களது பெயரை பதிவு செய்தல் வேண்டும்.

வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் , வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர் , சஞ்சய் காந்தி உள்ளிட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை செயலாளர்கள் வார்டு கழக செயலாளர் வாக்கு சாவடி நிலை முகவர்கள் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!