காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த தி.மு.க.

காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த தி.மு.க.
X

காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க ஆதிதிராவிட நலக்குழு சார்பில் 10 திருமண ஜோடிகளுக்கு சமத்துவ முறையில் திருமணம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் திமுகவினர் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அடேங்கப்பா இப்படியும் ஒரு கல்யாணமா?என காஞ்சிபுரத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருமண நிகழ்ச்சி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 10 ஜோடிகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசையுடன் சமத்துவ திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், அறுசுவை சைவ , அசைவ பிரியாணி விருந்து வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை நாள்தோறும் நல திட்ட உதவி மற்றும் உணவு வழங்குதல் என தி.மு.க. அனைத்து பிரிவு அணிகளும் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அணி சார்பில் மாமன்ற உறுப்பினரும், நான்காவது மண்டல குழு மாநகராட்சி தலைவருமான செவிலிமேடு மோகன் காஞ்சிபுரத்தில் பத்து ஜோடிகளுக்கு சமத்துவ திருமணம் நடத்தி வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    மேளம் , கரகாட்டம் , ஒயிலாட்டம் என தமிழக பாரம்பரிய கலைகளைக் கொண்டு மணமக்களை வரவேற்க , அவர்களுக்கு தேவையான உடைகள் திருமணத்திற்கான தாலி 2 கிராம், கட்டில் பீரோ மெத்தை உள்ளிட்ட கல்யாண சீர்வரிசைகளை வரிசையாக வைக்க , இளையராஜாவின் பாடல்கள் மாலை நேர இன்னிசை திருமண பாடல்கள் ஒலிக்க மணமக்களோ மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்ல , செல்பி எடுத்தும், உறவினருடன் மகிழ்ந்தும் தங்கள் திருமணத்திற்கு வாழ்த்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க உண்மையான மண விழா பந்தல் போல் அப்பகுதி காட்சியளித்தது ஒரு திருமணத்திற்கு அழைத்தாலே மணமக்களை வாழ்த்த சில நிமிடங்களே செலவிடப்படும் நிலையில் இத்திருமணத்தை காண காஞ்சிபுரத்தின் சுற்று பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடியுள்ளனர்.மறுபுறமோ திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் மணமக்களை மனதார பாராட்டி செல்லும் நிலையில், அவர்களுக்கு அறுசுவை பிரியாணி தயாரான நிலையில் இருந்தது.

    இரவு 9 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் மணமக்களுக்கு தாலி வழங்க இரவு 9:10க்கு திருமணம் சமூக சமுத்துவமாக நடைபெற்றது.மேலும் 170 நபர்களுக்கு இலவச அரிசி மூட்டை , 2070 பேருக்கு பிரியாணி , 70 கிலோ எடையுள்ள கேக் என கோலாகலமாக நிகழ்ச்சி ஏற்பாட்டு களை கட்டியது.

    Tags

    Next Story
    ai in future agriculture