காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னிலை

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து திமுக வேட்பாளர் முன்னிலை
X
காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையம். 
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் நடந்து வருகிறது இதில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் நடந்து வருகிறது இதில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆவது தொடங்கி 7 கட்டங்களாக கடந்த 40 நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவுக்காக 1932 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் மதுராந்தகம் செங்கல்பட்டு திருப்போரூர் செய்யூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் இருப்பு வைக்கப்பட்டு பலத்த மத்திய மாநில காவல் படை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இறுதி கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த சில தினங்களுக்கு முடிந்த நிலையில் இன்று அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளும் எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக காஞ்சிபுரம் நாடாளுமன்ற வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் 300 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டும் 750 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 900-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் காலை ஆறு மணி முதலே அரசியல் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் என அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். செல்போன் எலக்ட்ரானிக் வாட்ச் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. பத்திரிக்கையாளர் உட்பட அனைவருக்கும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அறையினை அகற்றி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் மூலம் எடுத்து வந்து வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இதற்கு முன்பாக தபால் வாக்கு பதிவுகளான 7500 வாக்குகளும் பிரிக்கப்பட்டு கட்சி வாரியாக எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக வேட்பாளர் செல்வம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போது 13 சுற்றுகள் முடிவடைந்து அதிகாரப்பர்வமாக அறிவிக்கப்பட்டதில் திமுக வேட்பாளர் செல்வம் 3 லட்சத்து 31,47 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2 லட்சத்து 6 ஆயிரத்து 637 வாக்குகளும் பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதி வெங்கடேசன் 87 ஆயிரத்து 898 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்தோஷ் குமார் 62940 வாக்குகளும் தற்போது வரை பெற்றுள்ளனர்.

திமுக வேட்பாளர் செல்வம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 410 வாக்குகள் முன்னிலை பெற்று 13வது சுற்று வரை முன்னிலையில் உள்ளார்.

Next Story
ai healthcare products