காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது
கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்தால் 59 நபர்கள் இறந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திமுக ஆட்சி பதவி விலக வேண்டும் எனவும், கள்ளச்சாராயம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டுமென கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன.
இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திமுக அரசை கண்டித்து கள்ளச்சாராயம் உயிரிழந்தது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கள்ள சாராய விவகாரத்தில் கண்டுகொள்ளாத திமுக அரசை பதவி விலக கோரியும், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து கண்டன கோஷம் எழுப்பினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu