வாக்கு எண்ணிக்கை மையத்தில் கைபேசி பயன்படுத்த தடை :மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கைபேசி பயன்படுத்த தடை :மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
X

 மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. (பைல் படம்)

வாக்கு எண்ணிக்கையின் போது 36 வாக்கு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , 70 பேர் பணி புரிய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை மையம் செயல்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியது: உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி , வாலாஜாபாத் பேரூராட்சி , திருப்பெரும்புதூர் பேரூராட்சி , உத்தரமேரூர் ஊராட்சி ஆகிய அமைப்புகளுக்கு காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நடைபெறுகிறது.

குன்றத்தூர் மற்றும் அங்காடி நகராட்சிகளுக்கு குன்றத்தூரில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மொத்தம் 35 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சிக்கு 14 மேஜைகளில், நகராட்சிகளுக்கு தலா ஆறு மேசைகளிலும் , பேரூராட்சிக்கு தலா மூன்று மேசைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 70 பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் 1195 நபர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 600 காவலர்கள் ஈடுபட உள்ளதாகவும்,ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து 18 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசியினை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!