மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்..

மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி   மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்..
X

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

தங்களது மாதாந்திர ஊக்கத்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாண்டிச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய்1000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் தற்போது வரை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் வழங்கப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் என பல தொடர்ந்து தற்போது வரை அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே தமிழக அரசு ஊக்கத் தொகையை உயர்த்தி தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது உதவித் தொகையை உடனடியாக உயர்த்தித் தர கோரி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன .

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!