புரட்டாசி முதல் நாளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி முதல் நாளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
X

கண்ணாடி அறையில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை காண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் முழுவதும் பல்வேறு வைணவ திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கருட சேவை நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதையொட்டி முதல் நாளிலேயே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளதையொட்டி பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்க வருகை தந்தனர்.

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி அத்திகிரி மலையில் இருந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி புரட்டாசி விரதத்தை தொடங்கி சென்றனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil