காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்
X

பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வேகவதி ஆற்றங்கரை தெருவில், டெங்கு நோய் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ளது வேகவதி ஆற்றங்கரை தெரு. இப்பகுதியில், தினக்கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு, டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையறிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள வீடுகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் தேங்கியுள்ள நீரை அகற்றியும், குடிநீர் தொட்டி மற்றும் சுகாதார அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிகளில் கடந்த இரு மாதங்களாகவே கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் டெங்குவால் பெண் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா