டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர். 

ஊழியர் கொலையை கண்டித்து காஞ்சிபுரம் ராசி மண்டல அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை ஊழியர் துளசிதாஸ் மற்றும் உதவியாளர் ராமு மீது மர்ம நபர்களால் கத்திக் குத்துச் செய்த சம்பவத்தில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். ராமு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிகழ்வை கண்டித்து காஞ்சிபுரம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல காலமாக ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்டும், கடை ஊழியர்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், இனி ஒருபோதும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் சமூக விரோதிகளை எச்சரிக்க வேண்டும் எனவும் , ஓரகடம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரிக்கை எழுப்பினர்.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!