காஞ்சிபுரம் மாவட்ட வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்ட வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள்
X
காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணிக்கை எவ்வாறு என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021க்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஆலந்தூர் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொன்னேரி கரையில் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் நான்கு அடுக்கு துணைராணுவ வீரர்கள், காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை ஒட்டி அதில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் விவரங்கள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறுகையில் , ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2 வாக்கு எண்ணிக்கை மையங்கள் செயல்படும் எனவம் 28 டேபிள்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 16 சுற்றும் , ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு 21 சுற்றுகளும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு 13 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 760 அரசு அலுவலர்கள் பணிபுரிய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture