வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்கும் முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
X

சீல் வைக்க வந்த போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரிகள் முறையான வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் பேருந்து நிலையம் , ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இந்நிலையில் ரயில்வே சாலையில் 45 கடைகள் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளில் 30 கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வரும் நிலையில் 15 கடைகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி சுமார் 98 லட்ச ரூபாய்க்கு மேல் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நிலுவை வைத்து உள்ளனர்.

வாடகை வசூலை தீவிரப்படுத்தி உள்ள மாநகராட்சி நிர்வாகம் ரயில்வே சாலையில் வாடகை செலுத்தாமல் நிலுவையில் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டு இன்று நகரமைப்பு அலுவலர் தாமோதரன் தலைமையில் வருவாய் அலுவலர் தமிழரசன்,நகர அமைப்பு ஆய்வாளர் சியாமளா, மற்றும் நகராட்சி அதிகாரிகளை அனுப்பி இருந்தனர்.


வாடகை நிலுவையில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கத் தொடங்கியதால் கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரயில்வே சாலை பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான போலீசார் ரயில்வே சாலையில் குவிக்கப்பட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாடகை செலுத்த கால அவகாசம் அளித்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

ஏற்கனவே குறைந்த வாடகையில் நீண்ட காலமாக தலைமுறையாக கடை வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் ஒரு குழுவாக இணைந்து நீதிமன்றம் செல்வதும் அதுவரையில் வாடகையில் செலுத்தாத காலம் தாழ்த்துவதும் இருப்பினும் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு எவ்வாறு பணம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என மற்ற வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 20 March 2023 11:45 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...