ஒமிக்ரான் அச்சம்: மீண்டும் தடுப்பூசி மையங்களில் குவியும் மக்கள்

ஒமிக்ரான் அச்சம்: மீண்டும் தடுப்பூசி மையங்களில் குவியும் மக்கள்
X

தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்.

ஒமிக்ரான் அச்சம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, -தமிழகம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 13 சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

மறுபுறம், தற்போது கொரோனா உருமாறி புதிய வகையில் ஒமிக்ரான் எனும்‌ பெயரில் பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பொதுமக்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளமால்பல காரணம் கூறி தவிர்த்த பொதுமக்கள். ஒமிக்ரான் பரவல் காரணமாக, மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த இரு நாட்களாக அதிக அளவில் முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று, தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம் பேரும் இரண்டாம் கட்ட தடுப்பூசி 45 சதவீதம் பேரும் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!