காஞ்சிபுரத்தில் விவசாயிகளுக்கு மாற்று வருமானத்திற்கான ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரத்தில் விவசாயிகளுக்கு மாற்று வருமானத்திற்கான ஆலோசனை கூட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்காக மாற்று வருமான வழி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஏற்றுமதி ஆலோசகர் சங்கரன் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்.

தமிழக இலவச பயிற்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கான ஏற்றுமதி, விற்பனை சந்தை, இயற்கை விவசாயம் முறைகள் குறித்து பல்வேறு வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர்

காஞ்சிபுரத்தில் ஏங்கி வரும் தமிழக இலவச பயிற்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கான மாற்று வருமான வழி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் எழிலன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் ஆர்கானிக் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து செந்தமிழ்ச்செல்வன் என்பவரும், ஏற்றுமதி மற்றும் விற்பனை குறித்து சங்கரன் என்பவரும், விவசாயம் மற்றும் அதன் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் மற்றும் பல விவசாய வல்லுநர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கான வேளாண் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட இவைகளுக்கான கண்காட்சியும் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு