சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை ஊராட்சியில் பழைய தார் சாலையை புதுப்பித்து தரக் கோரி சாலை மறியல் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதி வழியாக காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைந்து இருந்தது.
இந்நிலையில் புதிய மேம்பாலம் குருவிமலை அருகே பாலாற்று பகுதியில் அமைக்கப்பட்டதால் அப்பகுதியை இணைக்கும் வழியாக கிராமத்தின் புறவழிசாலையாக பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் பழைய சாலையை எந்தவிதமாக புதுப்பிக்காததால் அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிகள் ரேஷன் கடைகள் கூட்டுறவு பால் சங்கம், பொதுமக்கள் சந்தை உள்ளிட்டவைகளுக்கு நாள்தோறும் செல்ல வேண்டிய நிலையில் மிக சிரமப்படுவதாகவும், பருவ மழை காலங்களில் பள்ளி குழந்தைகள் தவறி விழுந்து காயமடைவதாகக் கூறி பல்வேறு மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாகவும் உடனடியாக இந்த சாலையை செப்பனிட்டுத் தரக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமர்ந்து புதிய சாலை அமைத்து தரக்கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் காவல்துறை சமாதானப்படுத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.சிறிது நேரம் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
கிராமப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பல்வேறு நிலையில் தெரிவித்தும் , செவி சாய்க்காத நிர்வாகத்தை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு கிராம மக்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu