தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுக வரவேற்பு பதாகைகள்
X

விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது

காஞ்சிபுரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுகவினர் பேனர்கள் வைத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மகாலில் மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர் அறிமுகம் செய்து பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார்.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து வரவேற்பு பதாகைகள் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ஆங்காங்கே நிறுவப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது

Tags

Next Story
ai marketing future