கல்லூரி மாணவ.மாணவிகள் மது விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவ.மாணவிகள் மது விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி
X

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்த போது எடுத்தப்படம்

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மது விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேரணியை துவக்கி வைக்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தியும், கோஷங்களால் விழிப்புணர்வு செய்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் கலைக்குழுவினர் மூலம் மதுவின் தீமைகள் குறித்த நாடகம் நடத்தப்பட்டு அதன் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் , காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் அலுவலர்கள் காவல்துறை ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story