சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு, மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில்

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு, மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில்
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பொறியியல் கல்லூரி மாணவன் சதீஷ்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவன் ஆன நவீன் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தேவபிரகாசம். இவரது மகன் நவீன் (21). இவர் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் EEE நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் மண்ணூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சக நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தண்டலம் சென்று விட்டு மண்ணூரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பரான தன்னுடன் படிக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த முகமது அகின் ஆகியோர் அரக்கோணம் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மேவளூர்குப்பம் அருகே எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் இருசக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கி இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நவீன் மற்றும் முகமதுஅகின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நவீனின் உடலைகைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சாலை விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தும் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா