நெசவாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை பார்வையிட்ட ஆட்சியர்

நெசவாளர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை பார்வையிட்ட ஆட்சியர்
X

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூரில் நெசவாளர்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் அறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாமை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சியிலுள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் பட்டு கைத்தறி இரகங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் உலக தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கைத்தறி பணிகளை மேற்கொள்ளவும் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்பட்டு 2021 முதல் செயல்பட்டு வருகிறது.

பட்டு பூங்காவானது 75 ஏக்கர் நிலப்பரப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் ரூ.82.56 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.இப்பூங்காவில் திட்டமிடப்பட்டுள்ள 24 கைத்தறி கூடங்களில் 12 தறி கூடங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளது.

மீதமுள்ள 12 தறி கூடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பூங்காவில் 470 தறிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் 650 நெசவாளர்கள் நேரடியாகவும், 350 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் பூங்காவினை பார்வையிட்டு, உட்கட்டமைப்புகளை ஆய்வு மேற்கொண்டு, பூங்காவில் நடைபெற்று வரும் நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாமினை பார்வையிட்டு, நெசவாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இவ் ஆய்வின்போது கைத்தறித் துறை துணை இயக்குநர் மணிமுத்து, அண்ணா பட்டு பூங்கா தலைமை நிர்வாக அலுவலர் ராமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!