மதுபான கூடங்களை மூட கலெக்டர் உத்தரவு.!

மதுபான கூடங்களை மூட கலெக்டர் உத்தரவு.!
X
மறு உத்தரவு வரும் வரை அனைத்து வகை மதுபான கூடங்களும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் 2வது அலை தீவிரமாக பரவுவதை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் (FL.2, FL3, FL3A, FL3AA &FL.10) 26.04.2021 முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்