காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா சீரமைப்பு பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா சீரமைப்பு பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
X

அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா சீரமைக்க கோரி தொடர் புகார் செய்தி வெளிவந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா காஞ்சிபுரம் நகரின் மத்தியில் மடம் தெரு பகுதியில் அமைந்துள்ளது.

இந்தப் பூங்கா அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு நடைபாதை சிறுவர்களுக்கு விளையாட்டு அரங்கம் உடற்பயிற்சி கூடம் என பல அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த பூங்காவில் மின்விளக்கு எரியாதது, நடைபாதை போட்டி முதற் போல் செடிகள் உள்ளது, இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதுகாப்பாக இல்லை என பெண்கள் என பல தரப்பினர் சீரமைக்க கோரிக்கை வைத்தனர்.


இது குறித்த செய்தி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் வெளியாகிய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நடைபாதை மின்விளக்கு, கழிவறை, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வரும் பதினைந்தாம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்தது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்