மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்களை பெற்ற ஆட்சியர் கலைச்செல்வி

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்களை பெற்ற ஆட்சியர் கலைச்செல்வி
X

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் , பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு மனுக்களை வாங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஊரக பகுதியில் அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம்கள், நகராட்சியில் 4 முகாம்கள், பேரூராட்சியில் 3 முகாம்கள், நகர்புறத்தினை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 15 முகாம்கள் என ஆக மொத்தம் 30 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 11.07.2024 முதல் 22.08.2024 வரை 54 முகாம்கள் 256 கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளதை தொடர்ந்து, இன்று உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சுந்தர் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்கள்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகர், திமுக ஒன்றிய செயலாளர் குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!