/* */

ஊத்துக்காடு இருளர் குடியிருப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 433 தொகுப்பு வீடுகள் 5 ஒன்றியங்களில் கட்டப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஊத்துக்காடு இருளர் குடியிருப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு.
X

ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் மற்றும் சிங்காடிவாக்கத்தில் 100 குடியிருப்புகள், காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டு குளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகள், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், திருப்பெரும்புதூர், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகள் மொத்தம் 443 குடியிருப்புகள் 19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக ஆட்சியராக பதவி ஏற்றுக்கொண்ட கலைச்செல்வி மோகன் இன்று காலை ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளின் நிலை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைவாக முடித்து ஒப்படைக்கவும், அரசு விதிகளின்படி உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஏற்கனவே மலையாங்குளம் மற்றும் குண்டு குளம் பகுதியில் முழுமை அடைந்து ஐந்து சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமை பெறும் என தெரிய வருகிறது.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஊராட்சி முகமை பொறியாளர் குழு மற்றும் ஒப்பந்ததாரர் என அனைவரும் உடன் இருந்தனர்.

கடந்த ஆட்சியராக இருந்த ஆர்த்தி இப்பணிகளை அப்போது பார்வையிட்ட போது பணிகள் முறையாக செய்யவில்லை என ஒப்பந்ததாரர் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளை மீண்டும் முறையாக செய்ய அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
 4. ஈரோடு
  பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
 5. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
 6. ஈரோடு
  ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
 7. ஈரோடு
  பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
 9. நாமக்கல்
  வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
 10. கரூர்
  கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...