அடையாறு கால்வாய் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு

அடையாறு கால்வாயில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.
Canal Works -கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர், உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும் வரதராஜபுரம் புவனேஷ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வெள்ள வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு நடத்தி வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.சிவருத்ரய்யா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், நீா்வளத்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், ஊராக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், நீா்வளத்துறை உதவி பொறியாளர் குஜராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu