காஞ்சிபுரத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

காஞ்சிபுரத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
X
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கால நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் அமைப்பு இணைந்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படாவிட்டால் வரும் 20 ஆண்டுகளில் 13% உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பூவுலக நண்பர்கள் சுந்தர்ராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் விரைவில் சமநிலை கார்பன் நிலையை அடைய தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் மாவட்டம் தோறும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஒருநாள் பயிற்சி அரங்கம் நடத்தவும் ஆலோசனை வழங்கினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் அமைப்பு இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் பயிற்சி கூட்டம் மாவட்ட வன அலுவலர் ரவி மீனா முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மண்டல சுற்றுச்சூழல் காலநிலை அமைப்பின் துணை இயக்குனர் மனிஷ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினை சேர்ந்த சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி அரங்கில், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் ஆராய்ச்சி திட்ட ஆய்வாளர் டாக்டர் மலர்விழி கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் தற்போது உள்ள நிலை, வரும் 20 ஆண்டு நிலை குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜ் பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பெரிதும் ஆபத்தான சவால் நிலையில் உள்ளது விரைவாக மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து சுந்தர்ராஜன் செய்தியாளரிடம் பேசுகையில் ,

தற்போது காலநிலை மாற்றம் நமக்கு பெரும் சிக்கலும் அளிக்கிறது. அதனை தவிர்ப்பதே நமது முதல் பணி. வறட்சி வெள்ளம் உணவு உற்பத்தி சரிவு என பல கடுமையான பாதிப்புகளை பல ஆண்டுகளில் சந்திக்க நேரிடும் என ஆய்வுகளும் அதற்கான தரவுகளும் தெரிவிக்கின்ற வகையில் அது குறித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவே இந்த கூட்டம் நடைபெறுகிறது எனவும் கார்பன் சமநிலை அடையும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் இது முதல் துவக்கம் என்பதால் இதை நிறைவேற்ற பல ஆண்டுகள் பல முயற்சிகளை மாவட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.

நீர்நிலை பாதுகாப்பு உணவு உற்பத்தி உள்ளிட்டவைகளை பிரதானப்படுத்த வேண்டுமே தவிர அதை அழித்து பல திட்டங்களை மேற்கொள்ள கூடாது என பல்வேறு போராட்டங்களில் தங்களது அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய நிலை உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் சங்கீதா, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!